×

சேத சாலையால் சிரமம் திண்டுக்கல்லில் திமுக கட்சி தேர்தல் ஆலோசனை

திண்டுக்கல், பிப். 28: திண்டுக்கல் ஒன்றியம், பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் திமுகவின் 15வது உட்கட்சி பொதுத்தேர்தல் ஆலோசனை கூட்டம் மரியநாதபுரம் மக்கள் மன்றத்தில் நடைபெற்றது. திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். ஒன்றியக்குழு தலைவர் ராஜா, ஒன்றிய கழக தேர்தல் ஆணையர்கள் ராஜப்பா, சந்திசசேகர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக திண்டுக்கல் சட்டமன்ற தேர்தல் ஆணையர்கள் பசீர் அகமது, ஜெயன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திமுக உட்கட்சி தேர்தல் குறி்த்த பல்வேறு கருத்துகள் ஆலோசிக்கப்பட்டது.

Tags : DMK ,party consultation ,Dindigul ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி