×

இன்று (பிப்.28) தேசிய அறிவியல் தினம் குஜிலியம்பாறை அருகே கனரக லாரிகளால் கண்டமாகும் சாலை

குஜிலியம்பாறை, பிப். 28: குஜிலியம்பாறை அருகே பேர்நாயக்கன்பட்டியில் மண் அள்ளி செல்லும் கனரக லாரிகளால் புதிய தார்ச்சாலைகள் சேதமடைந்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். குஜிலியம்பாறை ஒன்றியம், ஆர்.கோம்பை ஊராட்சி பேர்நாயக்கன்பட்டியில் பெத்தாநாயக்கன்குளம் உள்ளது. மழை பெய்யும் காலங்களில் இக்குளத்திற்கு நீர்வரத்து இருந்து வந்தது. இதன்மூலம் இப்பகுதியின் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, விவசாயிகள் பயன்பெற்று வந்தனர். இப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் இக்குளம் நீர்வரத்தின்றி வறண்ட முகத்துடன் காட்சியளிக்கிறது.திண்டுக்கல் மாவட்டத்தில் ஒவ்வொரு குளத்திலும் செம்மண் அள்ளுவதற்கும், அதை கொண்டு செல்வதற்கும் திண்டுக்கல் மாவட்ட புவியியல், சுரங்கத்துறை மூலம் நடைசீட்டு வழங்கப்படுகிறது. ஆனால் இந்நடைமுறையை பின்பற்றாமல் மாவட்டத்தின் ஏதோ ஒரு குளத்திற்கு மட்டும் செம்மண் அள்ளுவதற்கான நடைசீட்டை பெற்று கொண்டு, முறைகேடாக மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களிலும் முறைகேடாக செம்மண் திருட்டு நடப்பதாக புகார் எழுந்துள்ளது.

அதுபோலத்தான் மாவட்ட புவியியல், சுரங்கத்துறை அனுமதியின்றி பெத்தாநாயக்கன் குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள குளங்களில் உள்ள செம்மண்ணை ஜேசிபி இயந்திரம் மூலம் தடைமட்டத்திலிருந்து பலஅடி தூரம் வரை தோண்டி டிப்பர் உள்ளிட்ட கனரக லாரிகளில் மூலம் கடத்துகின்றனர். இந்த செம்மண் கடத்தல் பகல், இரவு பாராமல் படுஜேராக நடக்கிறது. இவ்வாறு திருட்டுதனமாக அள்ளப்படும் செம்மண் வெளியில் வியாபார நோக்கில் விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், குஜிலியம்பாறை- திண்டுக்கல் வழித்தடத்தில், புளியம்பட்டி பிரிவு சாலையில் இருந்து பேர்நாயக்கன்பட்டி வழியே எம்.களத்தூர் வரை 3 கிலோ மீட்டர் தூரம் வரை, பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.86 லட்சம் செலவில் புதிதாக தார்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. பெத்தநாயக்கன்குளத்தில் திருட்டுதனமாக அள்ளப்படும் செம்மண், 45 டன் எடையுள்ள கனரக டாரஸ் லாரிகள் மூலம் இச்சாலை வழியே கொண்டு செல்கின்றனர். இதனால் விவசாயிகள், மாணவர்கள், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக போடப்பட்ட புதிய தார்சாலைகள் முழுவதும் விரைவாக சேதமடையும் நிலை உள்ளது. எனவே இவ்வழிதடத்தில் செம்மண் திருட்டு கொண்டு செல்லும் கனரக லாரிகள் போக்குவரத்தை தடுத்து நிறுத்தி புதிதாக போடப்பட்ட தார்சாலை சேதமடையாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மண் கடத்தலுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ என்றனர்.

Tags : road ,National Science Day ,continent ,Kujiliyampara ,
× RELATED பள்ளி மாணவிக்கு சிஇஓ பாராட்டு