×

கொடைக்கானலில் வாலிபர் மாயம்

கொடைக்கானல், பிப். 28: கொடைக்கானல் பிலிஸ் வில்லா தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (31) இவரது மனைவி சத்யா. ரமேஷ் கொடைக்கானல் 7 ரோடு சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த பிப்.10ம் தேதி ஓட்டல் வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. சத்யா தனது உறவினர்களுடன் அக்கம்பக்கத்தில் தேடி உள்ளார். ஆனால் ரமேஷ் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சத்யா கொடைக்கானல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நத்தம் பள்ளியில் சைக்கிள் வழங்கல்
நத்தம், பிப். 28: நத்தம் துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. தலைமையாசிரியர் திருநாவுக்கரசு தலைமை வகிக்க, பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பொன்னழகர் முன்னிலை வகித்தார். முன்னாள் ஆசிரியர் சேவுகன் வரவேற்றார். அதிமுக ஒன்றிய குழு தலைவர் கண்ணன் கலந்து கொண்டு இலவச சைக்கிள்களை மாணவர்களுக்கு வழங்கி பேசினார். இதில் அதிமுக ஒன்றிய செயலாளர் ஷாஜகான், நகர செயலாளர் சிவலிங்கம், நகர பேரவை செயலாளர் சேக்தாவூது, நத்தம் வர்த்தகர்கள் சங்க தலைவர் சேக்ஒலி, ஒன்றிய கவுன்சிலர் சத்தியமூர்த்தி மற்றும் ஆசிரிய- ஆசிரியைகள் பலர் கலந்து கொண்டார். விழாவில் மொத்தம் 331 மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்பட்டது. ஆசிரியர் எல்லாரெட்டி நன்றி கூறினார்.

Tags : Kodaikanal ,
× RELATED கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்தது காட்டு மாடுகள்