வங்கியில் 2.70 கோடி மோசடி செய்த இருவருக்கு 3 ஆண்டு சிறை

சென்னை, பிப்.28: சென்னையை சேர்ந்த ராஜசேகரன், நடேஷ் குமார், அசோக் குமார், கிருஷ்ணகுமார் ஆகியோர் சென்னை மற்றும் புதுடெல்லி ஆகிய பகுதிகளில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளின் பல்வேறு கிளைகளில் போலியான காசோலைகளை கொடுத்து, அதன் மூலம் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார்கள் வந்தன.  அதன்பேரில், சென்னை சிபிஐ அதிகாரிகள் கடந்த 1995ம் ஆண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இவர்கள் ₹2.70 கோடி வரை மோசடி செய்திருப்பது அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை 25 வருடங்களாக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் சாட்சி விசாரணைகள், குறுக்கு விசாரணை, குற்றச்சாட்டு பதிவு என அனைத்து நடைமுறைகளும் முடிவடைந்த நிலையில் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.

அதில் முதல் குற்றவாளியான ராஜசேகரனுக்கும், இரண்டாவது குற்றவாளியான நடேஷ்குமாருக்கு தலா 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், தலா 30 ஆயிரம் என மொத்தம் ₹60 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டது. மற்ற 3 பேர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படாததால் அவர்களை நீதிபதி விடுதலை செய்து உத்தரவிட்டார்.

Related Stories: