×

தங்களை வஞ்சிப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு உதவி பேராசிரியர்கள் அரசு கல்லூரிக்கு இடமாற்றம் பணிபறிபோகும் அச்சத்தில் மகளிர் கல்லூரியில் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், பிப்.28: சிதம்பரம் அண்ணாமலை பல்க லைக்கழகத்தில் கூடுதலா கவுள்ள உதவிப் பேராசிரியர்கள் 136 பேர்களில், முதல் கட்டமாக 33பேர்களை அர சுக் கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதால், தங்கள் பணிபறி போகும் அச்சத்தில் வேப்பூர் மகளிர் கல்லூரியில் போராட்டம் நடந்தது.தமிழக அளவில் தனியார் கட்டுப் பாட்டிலுள்ள ஒரே ஒரு பல்கலைக் கழகமான சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் உதவி பேராசிரியர் நிலையில் கூடுதலாக பணிபுரிந்து வரும் 136 பேர்களை, தமிழகத்தில் உள்ள அரசுக் கல் லூரிகளுக்கு பணி நிரவல் அடிப்படையில் பணி மாறுதல் வழங்க கல்லூரிக் கல் வி இயக்ககத்தால் திட்டமிடப்பட்டுள்ளது.இதனையொட்டி முதல் கட்டமாக கடந்த 25ம்தேதி மாலை பிபிஏ எனப்படும் வணிக மேலாண்மைத்துறை பேராசிரியர்கள் 33 பேர்களை தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசுக் கல்லூரிகளுக்கு பணிமாறுதல் செய்து தமிழ்நாடு கல்லூரிக்கல்வி இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த 33 பேர்களில் ஒரத்த நாடு, லால்குடி, அறந்தாங்கி, பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அரசு கல்லூ ரிகளுக்கு தலா 3 உதவிப் பேராசிரியர்களை பணி நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் பல்கலைக் கழகங்களின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்த 41உறுப்பு கல்லூரிகளை, கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகள் அனைத்தையும் அரசுக் கல்லூரிகளாக மாற்ற 110 விதியின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்ததன்படி, முதல் கட்டமாக பல்கலைக் கழக கட்டுப்பாட்டில் இயங்கிவந்த 41உறுப்புகளில் 2019ம் ஆ ண்டில் முதல்கட்டமாக 14 உறுப்புக் கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் அரசுக் கல்லூரியும் ஒன்றாகும்.அடுத்ததாக படிப்படியாக வேப்பூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு மகளிர் மாதிரிக் கல்லூரி உள்ளிட்ட மீதமுள்ள 27 உறுப்பு கல்லூரிகளும் அரசுக் கல் லூரிகளாக மாற்றப்படவுள்ள நிலையில், ஏற்கனவே பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளாக இயங்கி வந்த குரும்பலூர் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரி அரசுக் கல்லூரியாக கடந்த 2019ம் ஆண்டு மாற்றப்பட்ட நிலையில், அதில் பணிபுரிந்து வரும் 11 நிரந்தர பேராசியர்கள் அல்லாத, உதவி பேராசிரியர்கள் நிலையிலுள்ள 50 கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் அதேபோல் 26 உதவிப் பேராசிரியர் நிலையிலுள்ள மணி நேர பணியாளர்கள், அண் ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மீதமுள்ள 103 பேர்களை பணிமாறுதல் செய்தால் எப்போது தங்கள் பணியிடம் காலியாகுமோ என்ற அச்சத்திலுள்ளனர்.

இதில் முதல்கட்ட நடவடிக்கையாக சிதம்பரத்திலிருந்து பிபிஏ எனப்படும் வணிக மேலாண்மைத் துறை பேராசிரியர் 33 பேர்கள் மட்டுமே பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளதால், அதில் குறிப்பாக யாருமே குரும்பலூர் அரசுக் கல்லூரிக்கு நியமிக்கப்படாத நிலையில், ஓரளவு நிம்மதி அடைந்திருந்தாலும், மீதமுள்ள 103 உதவிப் பேராசி ரியர்கள் எப்போது இடமா றுதல் செய்தாலும், பின் நிலை வரிசைப்படி, மணி நேரப் பணியாளர்கள் 26 பேர் உள்பட 76 உதவி பேரா சிரியர் பணியிடங்களுக்கு ஆபத்து வருமோ என்கிற அச்சத்தில் உள்ளனர். இது குறித்து ஏற்கனவே பெரம்ப லூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன் மூலமாக வும், கலெக்டர் அலுவலக த்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மூலமாகவும், தபால் மூலமாகவும் தமிழக அரசுக்கு குரும்பலூர் கல் லூரியில் பணிபுரியும் கவு ரவ விரிவுரையாளர்கள் மற்றும் மணிநேர பணியாளர்கள் மட்டுமன்றி, பதவி பறிபோகும் அச்சத்திலுள் ள 22 அலுவலக பணியாளர்களும் கருணைமனு அளி த்துள்ள நிலையில், தற்போது அண்ணாமலை பல்கலைக்கழக உதவிப் பேரா சிரியர் பணியிடங்கள் அரசுக் கல்லூரிகளுக்கு மாற்றப்படுவது அரசுக் கல்லூ ரிகளாக மாற்றப்பட்ட கல்லூரிகளின் உதவிப்பேராசிரியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

முதலில் வேப்பூரில் வெடித்ததுஅதேபோல் வேப்பூரில் இய ங்கி வரும் பாரதிதாசன் பல்கலைக் கழக உறுப்பு மகளிர் மாதிரிக் கல்லூரி யில் கடந்த 2013ம் ஆண்டு முதல், தற்காலிக கௌரவ விரிவுரையாளர்கள், மணி நேர கௌரவ விரிவுரையாளர்கள், பெற்றோர் ஆசிரி யர் சங்க ஆசிரியர்கள் மற் றும் அலுவலகப் பணியா ளர்கள் பணிபுரிந்து வரும்நிலையில் நேற்று சிதம்ப ரம் அண்ணாமலைப் பல்க லைக் கழக கௌரவ விரி வுரையாளர்களின் பணி மாறுதல் எதிரொலியாக அரசின் இந்த ஈவு இரக்கமி ல்லாத செயலுக்குக் கண் டனம் தெரிவித்து கல்லூரி யின் கேட் முன்பு வாயில் ஆர்ப்பாட்டமும், வாயில் முன்பு தர்ணாப் போராட்ட மும் நடத்தப்பட்டது. அதில் தற்போது பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் அனைத்தும் அரசுக் கல் லூரி மாற்றம் செய்து, அதில் பணிபுரிந்து வரும் விரிவுரையாளர்கள் மற் றும் பணியாளர்களை இரக்கமின்றி வெளியேற் றும் அரசின் நடவடிக்கை யைக் கண்டித்தும், தங்களு க்கு பணிப் பாதுகாப்பு வழ ங்கிடக் கோரியும் விரிவு ரையாளர்கள், பணியாளர் கள் பகல் 12.50 மணி முதல் 1.20 மணி வரை இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் விரிவுரையாளர்கள், பணியாளர்கள் 67பேர் கலந்து கொண்டனர்.

Tags : women ,assistant professors ,
× RELATED ஆட்டோ கவிழ்ந்து 4பெண்கள் காயம்