×

இன்று நடக்கிறது வேப்பந்தட்டை ஒன்றிய அலுவலகத்தில் நீர் மேலாண்மை, குடிநீர் பரிசோதனை பயிற்சி

பெரம்பலூர், பிப். 28: பெரம்பலூர் அருகே உள்ள வேப்பந்தட்டை ஒன்றிய அலுவலகத்தில், நீர் மேலா ண்மை மற்றும் குடிநீர் பரிசோதனை குறித்த ஒரு நாள் பயிற்சி நடந்தது.சென்னையில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வா ரியத்தின் தகவல் தொடர்பு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மற்றும் பெரம்பலூர் இந்தோ அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்திய பயிற்சிக்கு வேப் பந்தட்டை ஒன்றியக் குழுத் தலைவர் நூத்தப்பூர் ராமலிங்கம் தலைமை வகித்தார்.வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (வட்டார ஊராட்சி) இமயவரம்பன் (கிராம ஊராட்சிகள்) அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் செல்லம், ஊராட்சி தலைவர் தனலட்சுமி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.இந்தோ அறக்கட்டளையைச் சேர்ந்த முகம்மது உசேன், குடிநீர் பரிசோதனை குறித்து வேதியியலாளர் கார்த்திக்ராஜா ஆகியோர் கலந்து கொண்டு, தண்ணீரை எவ்வாறு சேமிக்க வேண்டும், வறட்சி காலத்தில் தண்ணீரை எவ்வாறு சிக்கன மாகப் பயன்படுத்த வேண் டும் என்பது குறித்தும், நாம் அருந்தும் குடிநீரை எவ்வா று சுத்தப்படுத்த வேண்டும் என்பது குறித்தும் பயிற்சி அளித்தனர். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் சுப்பிரமணியன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபால், அரசு மேல்நிலைப்பள்ளி தலை மையாசிரியர் சுசீலா, வேர்ல்டு விஷன் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த கவிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக இந் தோ அறக்கட்டளையைச் சேர்ந்த செல்வக்குமார் வரவேற்றார். முடிவில் சுதா நன்றி கூறினார்.



Tags : Drinking Water Testing ,
× RELATED டூவீலர் விபத்தில் மே.வங்க கட்டிட தொழிலாளி பலி