×

ஏலாக்குறிச்சி அரசு பள்ளியில் மூலிகை கண்காட்சி

அரியலூர், பிப்.28: அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி அரசு மேல் நிலைப்பள்ளியில் புத்தகம் மற்றும் மூலிகைக் கண்காட்சி பள்ளித் தலைமையாசிரியர் செல்வராசு தலைமையில் நேற்று நடைபெற்றது.கண்காட்சியினை மாவட்ட கல்விக் அலுவலர் அம்பிகாபதி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்க்களம் புத்தக நிலையம் சார்பாக புத்தகக்கண்காட்சியும், பள்ளி தாவரவியியல் ஆசிரியர், மாணவர்கள் சார்பாக மூலிக்கைக்கண்காட்சியும் அதன் பயன்பாடு பற்றியும் விளக்கமளிக்கபட்டது. மாவட்ட கல்வி அலுவலர் மாணவர்களிடம் பேசும்போது உங்களது உடல் நலத்தை பேணிக்காக்க நமது வீட்டின் அருகிலேயே கிடைக்கும் மூலிகைகளையும், உங்களது வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ள பல அறிஞர் பெருமக்கள் எழுதிய நூல்களையும் உங்களுக்காக காட்சிப்படுத்தியுள்ளனர். மாணவர்களும் பொதுமக்களும் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி இந்தியாவின் சிறந்த குடிமகன்களாக வரவேண்டும் என்று கூறினார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் மீனாம்பிகா, ஒன்றியக் குழு உறுப்பினர் திரிசங்கு, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முருகானந்தம், துணைத் தலைவர் பழனிசாமி மற்றும் பொது மக்கள் கலந்துக் கொண்டனர். துணைத் தலைமையாசிரியர் செந்தில்குமார் வரவேற்றார். தமிழாசிரியர் தாமஸ் பெர்ணான்டோ நன்றி கூறினார்.


Tags : Exhibition ,Elakurichi Government School ,
× RELATED திருப்பாலைக்குடி அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி