×

கற்கள் பரப்பி 2 மாதமாகியும் சாலை அமைக்காத அவலம்

தஞ்சை, பிப். 28: தஞ்சை வடக்குவாசல் பகுதியில் புதிய சாலை அமைக்க ஜல்லி கற்கள் பரப்பி 2 மாதமாகியும் பணிகள் நடக்கவில்லை. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.தஞ்சை வடக்குவாசல் நால்ரோடு பகுதியில் கடந்த 3 மாதத்துக்கு முன் சாலை அமைக்கும் பணி துவங்கியது. முதலில் சாலையை கொத்தி பெயர்த்து எடுத்து அதன்மேல் கிராவல் பரப்பப்பட்டது. கிராவல் பரப்பி ஒரு மாதம் வரை எந்த பணியும் மேற்கொள்ளவில்லை. இதனால் மழையில் செம்மண் சாலையில் பரவி நடந்து செல்வோர் முதல் வாகனங்களில் செல்வோர் வரை அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் கடந்த 2 மாதத்துக்கு முன் இதன்மேல் ஜல்லிக்கற்கள் பரப்பப்பட்டது. அத்துடன் பணிகள் கிடப்பில் போடப்பட்டன.தற்போது சாலையில் ஜல்லிக்கற்கள் பரவலாக கிடப்பால் சாசைக்கிளில் செல்வோர், இருசக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி கீழே விழுந்து காயங்களுடன் செல்கின்றனர். குறிப்பாக பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் அரசின் இலவச சைக்கிளில் செல்லும்போது ஜல்லிக்கற்கள் இடறி சைக்கிளில் இருந்து கீழே விழுந்து காயமடைகின்றனர். நடந்து செல்வோரும் காலில் செருப்பின்றி நடக்க முடியாத வகையில் கற்கள் கால் பாதங்களை பதம் பார்க்கின்றன.

இப்பகுதியில் தான் ராஜகோரி சுடுகாடு உள்ளது. தினமும் குறைந்தது 10 உடல்களாவது இப்பகுதிக்கு கொண்டு வந்து அடக்கம் செய்யப்படுகிறது. இதேபோல் மின்வாரிய அலுவலகம், தேவாலயம், கோயில்கள், பள்ளி என மக்கள் வந்து செல்லும் பகுதியில் சாலை பணிகள் 2 மாதமாக கிடப்பில் போடப்பட்டதற்கு காரணம் என கேள்வி எழுந்துள்ளது.இதனால் அவதிக்குள்ளாகும் பொதுமக்கள் உடனடியாக சாலை பணிகளை துவங்கி முடிக்க வேண்டும். அப்போது தான் பொதுமக்கள் இந்த சாலையை பயன்படுத்த முடியும். சாலை என்பது மக்களுக்கு எளிதாக போக்குவரத்துக்கு பயன்பட வேண்டும். அதை தவிர்த்து மக்களுக்கு இடையூறாக அமையக்கூடாது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இச்சாலையை செப்பனிட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தஞ்சை வடக்குவாசல் மக்கள் அவதிகடந்த 2 மாதத்துக்கு முன் இதன்மேல் ஜல்லிக்கற்கள் பரப்பப்பட்டது. அத்துடன் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. தற்போது சாலையில் ஜல்லிக்கற்கள் பரவலாக கிடப்பால் சாசைக்கிளில் செல்வோர், இருசக்கர  வாகனங்களில் செல்வோர் தடுமாறி கீழே விழுந்து காயங்களுடன் செல்கின்றனர்.



Tags :
× RELATED ஒரத்தநாடு அருகே பின்னையூர் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு