×

பழிவாங்கும் போக்கை கைவிடகோரி நுகர்பொருள் வாணிப கழக தொழிற்சங்க கூட்டமைப்பு வாயிற்கூட்டம்

தஞ்சை, பிப். 28: பழிவாங்கும போக்கை கைவிடகோரி தஞ்சையி–்ல் நுகர்பொருள் வாணிப கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் வாயிற்கூட்டம் நடந்தது.தஞ்சை முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை விளக்க வாயிற்கூட்டம் நடந்தது. இதில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு என்ற பெயரில் கொள்முதல் பணியாளர்களை பணிநீக்கம் செய்து பழிவாங்கும் போக்கை உடனடியாக கைவிட வேண்டும். நெல் கொள்முதல் பணிகளுக்கு தேவையான களப்பணியாளர்கள் வழங்காமல் கூடுதல் பணிச்சுமை வழங்கி பணி செய்து கொண்டு இருக்கும் பணியாளர்களுக்கு மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தி பணியிலிருந்து விடுவிப்பதை நிறுத்த வேண்டும் என்பது உட்பட 16 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

எல்பிஎப் பொது செயலாளர் வள்ளுவன், ஐஎன்டியூசி பொது செயலாளர் இளவரி, ஏஐடியூசி பொது செயலாளர் சந்திரகுமார், சிஐடியூ பொது செயலாளர் புவனேஸ்வரன், அம்பேத்கர் பணியாளர் சங்க பொது செயலாளர் ராஜமாணிக்கம், ஏஐசிசிடியூ பொது செயலாளர் கோவிந்ராஜ் பா.தொ.ச. மாநில தலைவர் கிருஷ்ணராஜ் ஆகியோர் விளக்க உரையாற்றினர். வாயிற்கூட்டத்தில் அனைத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த நெல் கொள்முதல் பணியாளர்கள், தொழிலாளர்கள் பங்கேற்றனர்.


Tags : FUTA ,Consumer Trade Union Federation ,
× RELATED ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை...