×

ஆவணங்களை பெற்று கொண்டு சுயஉதவி குழுவில் கடன் பெற்று மோசடி எஸ்பியிடம் பெண்கள் புகார் மனு

கரூர், பிப். 28: ஆவணங்கள் பெற்றுக் கொண்டு தங்களுக்கு தெரியாமல் சுயஉதவிக் குழுவில் பணம் பெற்று ஏமாற்றியதாக கரூர் திருமாநிலையூர் பகுதியை சேர்ந்த பெண்கள் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.கரூர் திருமாநிலையூர் பகுதியை சேர்ந்த சில பெண்கள் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நேற்று வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது:திருமாநிலையூர் பகுதியில் உள்ள சிலர், எங்களைப் போன்ற குறிப்பிட்ட சிலருக்கு, தனியார் நிறுவனத்தில் சுய உதவிக்குழு கடன் பெற்றுத் தருவதாக கூறி எங்கள் அனைவரிடமும் ஆவணங்களை பெற்று, எங்கள் பெயரில் அவர்கள் கடன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இது குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர். இதே போன்ற கோரிக்கைகளுடன் மற்றொரு குழுவினரும் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Tags : SBI ,Self Help Group ,
× RELATED பெண்களும் வலிப்பு நோயும்