×

சேலம் சர்வீஸ் சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பையில் தீப்பற்றி எரிவதால் பரபரப்பு

கரூர், பிப். 28: கரூர் சேலம் சர்வீஸ் சாலையோரம் நேற்று குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கரூர் நகராட்சிக்குட்பட்ட கோவை சாலை திருக்காம்புலியூர் பகுதியில் இருந்து மதுரைக்கு செல்லும் சர்வீஸ் சாலையோரம் ஏராளமான தனியார் நிறுவனங்கள், உணவகங்கள் உள்ளன.இந்த சாலையோரம் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட குப்பைகள் கொட்டப்பட்டிருந்தன. நேற்று காலை 11மணியளவில் கொட்டி வைக்கப்பட்டிருந்த குப்பைகள் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.தீயினால் உருவாகிய புகை, அருகில் உள்ள மதுரை சேலம் மேம்பாலம் வரை பரவியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீ மேற்பகுதியில் சென்று கொண்டிருந்த மின்கம்பிகளையும் தாக்கிய வண்ணம் இருந்தது.

இதனால், பல்வேறு அசம்பாவித நிகழ்வுகளும் நடைபெற வாய்ப்புள்ளதாக அனைவராலும் கூறப்படுகிறது. ஆனாலும் இதுபோன்ற நிகழ்வுகள் கரூர் நகரப்பகுதிகளில் ஆங்காங்கே நடைபெறுகிறது.தானாக தீப்பிடித்து எரிவது ஒரு புறம் என்றாலும், அவ்வப்போது சேகரிக்கப்படும் குப்பைகள் சாலையோரம் எரிக்கப்படுகின்றன.எனவே இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாத வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : Salem Service Road ,
× RELATED குறுவை சாகுபடி பொய்த்து போனதால் சோளம் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்