×

விவசாயிகள் ஏமாற்றம் பைபாஸ் சாலை வளைவு பாதையோரம் குளம் போல் தேங்கி கிடக்கும் தண்ணீரால் மக்கள் அவதி

கரூர், பிப். 28: கரூர் சேலம் பைபாஸ் சாலை செல்லும் வளைவு பாதையோரம் தேங்கியுள்ள நீரை அகற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.மதுரை சேலம் பைபாஸ் சாலை திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகே கோவை செல்லும் சாலையை அடையும் வகையில் சர்வீஸ் சாலை உள்ளது. மதுரை, திண்டுக்கல் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து கோவை, ஈரோடு செல்லும் வாகனங்கள் அனைத்தும் இந்த சாலையின் வழியாகசெல்கின்றன.இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கோவை பிரிவுச் சாலையோரம் குளம் போல தண்ணீர் தேங்கியுள்ளது. இதன் வழியாகத்தான் வாகனங்கள் சென்று வருகின்றன. தண்ணீர் தேக்கம் காரணமாக, பஸ்சுக்காக காத்திருக்கும் மக்களும் அவதிப்படுகின்றனர். எனவே, இந்த பகுதியில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.


Tags : Bypass road ramp ,pond ,
× RELATED விவசாயிகளுக்கு வழங்கப்படும்...