×

தென்னிலை அருகே கூலி தொழிலாளி தற்கொலை

க.பரமத்தி, பிப். 28: தென்னிலை அருகே மனநலம் பாதிக்கப்பட்டவர் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் தூக்கிட்டு இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.க.பரமத்தி அடுத்த மொஞ்சனூர் ஊராட்சிக்குட்பட்ட கந்தசாமிவலசு பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் (50). கூலி தொழிலான இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் அதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை மேற்கொண்டு உரிய பலன் கிடைக்காமல் மனவேதனையில் இருந்ததாக போலீசாரால் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்தவர் அதே பகுதி காட்டில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து அவரது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், தென்னிலை போலீசார் இறந்தவர் உடலை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.Tags : Suicide worker ,south ,
× RELATED தென் ஆசிய பெண்களுக்கு இந்திய கலாச்சாரம் !