×

தரகம்பட்டியில் கோர்ட் அமைக்க வேண்டி கடவூர் தாலுகா அலுவலகம் முன் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கடவூர், பிப். 28: தரகம்பட்டியில் கோர்ட் அமைக்க வேண்டி விவசாய சங்கத்தினர் மற்றும் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கடவூர் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவாசய சங்க மாவட்ட தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார்.ஒன்றிய செயலாளர்கள் மார்க். கம்யூ. பழனிவேல், தே.மு.தி.க. நாகராஜ், பா.ம.க. பழனிச்சாமி, தி.மு.க ஊராட்சி செயலாளர்கள் ஆரிப்கனி, ராஜ்கபூர், வி.சி. மாவட்ட நிர்வாகி அவினாசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வக்கில் கருப்பன் வரவேற்றார்.ஆர்ப்பாட்டத்தில் தே.மு.தி.க. மாவட்டப் பொருளாளர் கஸ்தூரி தங்கராஜ், விவசாய சங்க மாவட்ட செயலாளர் சக்திவேல், மார்க். கம்யூ. மாவட்டக்குழு உறுப்பினர்கள் இலக்குவன், ராமமூர்த்தி, உழவர் உழைப்பாளர் கட்சி நிர்வாகி ஆறுமுகம், வக்கில் கருப்பன் ஆகியோர் பேசினர். இதில் கடவூரை வட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு தரகம்பட்டியில் கோர்ட் அமைக்க வேண்டுமென வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. நிகழ்ச்சியில் பல்வேறு கட்சி பிரதிநிதிகள், விவசாய சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Tags : parties ,office ,taluk ,court ,Kadavur ,
× RELATED தாசில்தார் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம்