×

சுற்றுச்சூழலை பாதுகாக்க மாணவ, மாணவிகளுக்கு ஓவியங்களில் விழிப்புணர்வு

தரங்கம்பாடி,பிப்.28: சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்துடன் ஓவியங்கள் மூலம் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ஓவியர் ஒருவர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.கடலூர் மாவட்டம், மன்னம்பாடி ஊரை சேர்ந்தவர் தமிழரசன். ஓவியரான இருவர் கடந்த 11 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் குறித்து மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஒரு தலைப்பில் ஓவியங்கள் வரைந்து அதை கண்காட்சியாக ஒவ்வொரு கல்லூரியிலும் நடத்தி சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அவரது ஓவிய கண்காட்சி பொறையார் டி.பி.எம்.எல் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஜீன்ஜார்ஜ் தலைமை வகித்தார். மாலை கல்லூரி துணை முதல்வர் ஜோயல்எட்வின்ராஜ் வரவேற்றார். தரங்கம்பாடி தாசில்தார் சித்ரா ஓவியக் கண்காட்சியை திறந்து வைத்தார். கண்காட்சி நோக்கம் குறித்து ஓவியர் தமிழரசன் பேசினார்.கல்லூரி மாணவ எக்ஸ்னோரா ஈரநிலம் அமைப்புடன் இணைந்து இக்கண்காட்சியை நடத்தினர். எக்ஸ்னோரா கல்லூரி ஒருங்கிணைப்பாளர் ஜோதிபாஸ் நன்றி கூறினார்.


Tags :
× RELATED கொரோனா விழிப்புணர்வு பணிக்கு நர்சிங் மாணவர்களை பயன்படுத்த உத்தரவு