×

வியாபாரிகள் பொதுமக்கள் அதிர்ச்சி காரைக்காலில் மாணவர்கள் திறனை வெளிகாட்டும் வானவில் நிகழ்ச்சி அறிவிப்பு செய்யாததால் வெறிச்சோடியது

காரைக்கால், பிப்.28: காரைக்கால் மாவட்ட கல்வித்துறை சார்பில், முதன்முறையாக எந்தவித முன் அறிவிப்பும் செய்யாமல் வானவில் நிகழ்ச்சி நடத்தப்பட்டதால், அரங்குகள் வெறிச்சோடி காணப்பட்டது.காரைக்கால் மாவட்ட கல்வித்துறை சார்பில், அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் திறன்களை பொதுமக்களிடையே வெளிக்காட்டும் வகையில், முதன்முறையாக வானவில் எனும் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. காரைக்கால் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள காமராஜர் திடலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், மாணவர்களிடையே வாசித்தல், கலைப்பொருட்கள், வில்லுப்பாட்டு, பொம்மலாட்டம், சமுதாய நலப்பணித் திட்டம், நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய பசுமைப் படை, என்.சி.சி மாணவர்களின் செயல்பாடுகள் குறித்து விளக்கும் வகையில் தனித்தனி சிறப்பு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது.

ஒவ்வொரு அரங்குகளையும், எம்.எல்.ஏகள் அசனா, கீதா ஆனந்தன், கலெக்டர் அர்ஜூன் சர்மா, கல்விதுறை அதிகாரி அல்லி மற்றும் பலர் ரிப்பன்வெட்டி திறந்து வைத்தனர். நிகழ்ச்சி குறித்து, முன்னதாக நடத்தப்பட்ட நடனம், வாய்ப்பாட்டு, வாசிப்பு போட்டி, யோகா, கைவினை பொருட்கள் தயாரித்தல், ரங்கோலி, வாத்தியங்கள் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளின் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு நிகழ்ச்சியின் முடிவில், பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.காரைக்கால் மாவட்டத்தில் முதன்முறையாக நடத்தப்பட்ட இந்த வானவில் நிகழ்ச்சி குறித்து, மாவட்ட நிர்வாகமோ, கல்வித்துறையோ எந்தவித முன் அறிவிப்பும் செய்யவில்லை. இதனால், யாருக்காக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டதோ அவர்கள் (மாணவர்கள்) பெரும் அளவில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. அதேபோல், பொதுமக்களும் கலந்துகொள்ளவில்லை. இனி வரும் காலத்தில், இந்நிகழ்ச்சியை முரையாக நடத்தி, மாணவர்களை மகிழ்ச்சிபடுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Tags : merchants ,rainbow show ,Karaikal ,
× RELATED கொரோனா தாக்குதலுக்கு இடையே அதிர்ச்சி...