×

ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வாங்க வங்கிகள் மறுப்பு

நாகை,பிப்.28: நாகூர் பகுதியில் உள்ள வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க மறுப்பதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.நாகூர் பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, தனியார் வங்கிகள் என்று சுமார் 5 க்கும் மேற்பட்ட வங்கிகள் உள்ளது. இந்த வங்கிகளில் வாடிக்கையாளர்கள், வணிகர்கள், பொதுமக்கள் ஆகியோர் சென்று ரூ.2 ஆயிரத்தை கொடுத்து சில்லரை தரும்படி கேட்டால் ரூ.2 ஆயிரத்தை வாங்க மறுக்கின்றனர். இதனால் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்திய அரசின் ரூபாய் நோட்டுகளை வாங்க வங்கிகள் மறுப்பதன் நோக்கம் என்ன என்று புரியவில்லை என்று பொதுமக்கள் புலம்பி செல்கின்றனர்.

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்கு சில்லரை கொடுக்க கூடாது என்று மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது. அதற்கு பதிலாக வாடிக்கையாளர்கள் அந்த நோட்டுகளை தங்களது வங்கி கணக்கில் செலுத்தலாம். ஆனால் சில்லரை கொடுக்க முடியாது என்ற உத்தரவு வந்துள்ளது என்று வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. திடீரென வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க மறுப்பது ஏன் என்று புரியாமல் பொதுமக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Tags : Banks ,
× RELATED திட்டமிட்டபடி கடனை செலுத்தும்படி...