×

தரங்கம்பாடி அருகே தாய் திட்டியதால் மகன் தூக்கிட்டு தற்கொலை

தரங்கம்பாடி, பிப்.28: தரங்கம்பாடி அருகே தாய் திட்டியதால் தூக்கு போட்டு பள்ளி மாணவன் ஒருவன் உயிரிழந்தான்.நாகை மாவட்டம் இலுப்பூர் மெயின்ரோட்டில் வசிப்பவர் மாரியம்மாள். இவர் கணவர் மணிமாறன். 2 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். தன்னுடைய மகன்கள் செல்வகணேஷ், சுரேஷ்குமார் ஆகியோருடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை தனது மகன் செல்வகணேஷ்(13) இடம் பால் வாங்கி வர சொன்னதாகவும், அவன் அதற்கு மறுத்ததாகவும் அதனால் கோபம் அடைந்த மாரியம்மாள் அவனை திட்டியதாகவும் கூறப்படுகிறது.இதனால் மனமுடைந்த செல்வகணேஷ் வீட்டு கொல்லை புறம் உள்ள ஆட்டுக்கொட்டகையில் கயிறால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டான். செல்வகணேஷ் சங்கரன்பந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தான். இது குறித்து பொறையார் போலீசார் வழக்கு பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பொறையார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.Tags : Tharangambadi ,
× RELATED பிளாட்டை வாடகைக்கு எடுத்து மகனை தனிமைப்படுத்திய சுரேஷ் கோபி