×

நாகூர் பகுதியில் சிறுமி பலாத்கார வழக்கில் 24 ஆண்டாக தேடப்பட்ட காரைக்கால் வாலிபர் கைது

காரைக்கால், பிப்.28: சிறுமி பலாத்கார வழக்கில் 24 ஆண்டாக தேடப்பட்ட காரைக்கால் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.காரைக்கால் அருகே உள்ள சுரக்குடி சந்திவெளி தோப்பு பகுதியில் கடந்த 1996ம் ஆண்டு சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வழக்கில் அதே பகுதியை சேர்ந்த சுதாகர் (42) மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். ஜாமீனில் வந்த சுதாகர் தலைமறைவானார். வழக்கு விசாரணையில் ஆஜராகவில்லை.இதனால் காரைக்கால் நீதிமன்றம், சுதாகரை தேடப்படும் குற்றவாளியாக ஆணை பிறப்பித்து அவரை கைது செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது. சீனியர் எஸ் பி. மகேஷ்குமார் பர்ன்வால் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்ஐ பிரவீன் குமார் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் சுதாகர் கேரளா பத்தனம் திட்டா பகுதியில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. தனிப்படையினர் அங்கு சென்று சுதாகரை கைது செய்து, நேற்று முன்தினம் காரைக்கால் அழைத்து வந்தனர். நேற்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.Tags : Karaikal ,area ,Nagore ,
× RELATED சென்னையில் சானிடைசரை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்த இளைஞர் கைது