×

நாகையில் பரபரப்பு சாமியம் வீரமாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கொள்ளிடம், பிப்.28: நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே சாமியம் கிராமத்தில் உள்ள வீரமா காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.விழாவையொட்டி முதல் நாள் கணபதி ஹோமம், வாஸ்துசாந்தி, இரண்டாம் நாள் யாக பூஜையில் பிம்பசுத்தி கும்பா அலங்காரமும் தொடர்ந்து யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடு நிகழ்ச்சியும் மகாகும்பாபிஷேகமும் நடைபெற்றது.தொடர்ந்து முனீஸ்வரர், பூவாயியம்மன், புற்றடி மாரியம்மன், மதுரை வீரன், சங்கிலி கருப்பன் ஆகிய பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் தர் வாண்டையார், மாவட்ட செயலாளர் முனிபாலன் மற்றும் உள்ளூர் வெளியூர்களிலிருந்தும் வந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சாமியம் கிராம மக்கள் சார்பில் செய்திருந்தனர்.


Tags : Temple of Nagarapuram ,
× RELATED பொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்க நாள் ஒன்றுக்கு 2000 மாஸ்க் தயாரிப்பு