புதூர் வட்டார ரேஷன்கடைகளில் முறைகேடாக பொருட்கள் விற்ற விற்பனையாளர்களுக்கு அபராதம்

தூத்துக்குடி, பிப்.28:புதூர் வட்டார ரேஷன்கடைகளில் பறக்கும் படையினர் நடத்திய ஆய்வில் முறைகேடாக பொருட்கள் விற்ற விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.தூத்துக்குடி மண்டல இணைப்பதிவாளர் ரவிச்சந்திரன் உத்தரவின்பேரில், புதூர் வட்டாரத்திலுள்ள 51 ரேஷன்கடைகளில் இணைப்பதிவாளர் தலைமையிலான பறக்கும் படையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.இந்த ஆய்வின்போது அத்தியாவசிய பொருட்களான அரிசி, சீனி, கோதுமை, மண்ணெண்ணெய், சிறப்பு பொது விநியோக திட்ட பொருட்களான துவரம்பருப்பு, சமையல்எண்ணெய் ஆகிய பொருட்களில் இருப்பு குறைவு ஏற்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

அரிசி 13கிலோ, சீனி 91கிலோ, கோதுமை 9கிலோ, மண்ணெண்ணெய் 34.5லிட்டர், துவரம்பருப்பு 26கிலோ மற்றும் சமையல் எண்ணெய் 9பாக்கெட்டுகள் முறைகேடாக விற்பனை செய்தது ஆய்வின் மூலமாக தெரிய வந்தது.இந்தஆய்வில், ரூ.9ஆயிரத்து 500அளவிற்கு முறைகேடுகள் கண்டறியப்பட்டு அபராதத் தொகையானது விற்பனையாளர்களிடம் இருந்து வசூலிக்க உத்தரவிடப்பட்டது. மேலும், ஆய்வின்போது ரூ.975மதிப்பிலான பொருட்கள் இருப்பு அதிகமாக கண்டறியப்பட்டு கடை இருப்பில் ஏற்றப்பட்டது. இத்தகவலை தூத்துக்குடி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Related Stories: