உடன்குடியில் திருடிய பைக்கில் ஊர் சுற்றிய வாலிபர் கைது

உடன்குடி, பிப்.28: உடன்குடியில் திருடிய பைக்கில் ஊர் சுற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். உடன்குடியை அடுத்த தேரியூரைச் சேர்ந்த மகாராஜா மகன் மணிகண்டன்(20), கட்டிட தொழிலாளி. கடந்த இரு நாட்களுக்கு முன்பு வீட்டு முன்பகுதியில் நிறுத்தி இருந்த இவரது பைக்கை பட்டப்பகலில் யாரோ மர்மநபர் திருடிச் சென்றுவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று குலசேகரன்பட்டினம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உடன்குடி பஜாரில் ஒரு வாலிபர் பைக்கை ஹாயாக ஓட்டிச்சென்றார். சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபரிடம் விசாரித்தனர்.

Advertising
Advertising

இதில் அவர், உடன்குடி அருகே மரியம்மாள்புரத்தைச் சேர்ந்த தங்கவேல் மகன் பச்சமுத்து என்ற பட்டையா என்பதும் தேரியூரைச் சேர்ந்த மணிகண்டனின் பைக்கை திருடிய அவர் அதில் ஜாலியாக ஊர் சுற்றியதும் தெரியவந்தது. ேநற்று பஜாருக்கு வந்த போது சிக்கி கொண்டார். இதையடுத்து போலீசார் பச்சமுத்து என்ற பட்டையாவை கைது செய்து, அவரிடம் இருந்து பைக்கை பறிமுதல் செய்தனர். இதுபோல் வேறு எங்கெல்லாம் கைவரிசை காட்டியுள்ளார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: