தருவைகுளத்தில் கிறிஸ்தவர்கள் தவக்காலம் துவங்கியது

குளத்தூர், பிப்.28: தருவைகுளம் புனிதமிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் சாம்பல் புதன் திருப்பலியுடன் கிறிஸ்துவர்களின் தவக்காலம் துவங்கியது.இயேசுவின் உயிர்ப்புக்கு முன்பாக கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலம் கடைப்பிடிப்பது வழக்கம். இந்தாண்டு தவக்காலம் நேற்று முன்தினம் சாம்பல் புதனுடன் துவங்கியது. இதையொட்டி தருவைகுளம் தூய மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் நேற்று முன்தினம் அதிகாலை சிறப்பு திருப்பலியுடன் குருத்தோலையை எரித்த சாம்பலை கிறிஸ்தவர்களின் நெற்றியில் பூசப்பட்டு தவக்காலத்தை துவக்கினர். தொடர்ந்து 6 வெள்ளிக்கிமைகளிலும் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து ஏப்ரல் 12ம்தேதி இயேசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சாம்பல் புதனை முன்னிட்டு பங்குதந்தை எட்வர்ட்ஜே கிறிஸ்தவர்களின் நெற்றியில் சிலுவையிட்டார்.

Related Stories: