×

திருவண்ணாமலையில் `பேட்டரி ஆப் டெஸ்ட்'போட்டி தடகள போட்டிகளில் அசத்திய பள்ளி மாணவ, மாணவிகள் 2 ஆயிரம் பேர் பங்கேற்பு

திருவண்ணாமலை, பிப்.28: திருவண்ணாமலையில் நேற்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கு `பேட்டரி ஆப் டெஸ்ட்' விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துவேல் பரிசு வழங்கினார்.திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று, உலக திறனாளர்கள் கண்டறியும் திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு `பேட்டரி ஆப் டெஸ்ட்' போட்டிகள் நடந்தது. இப்போட்டிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் நான்சி ெதாடங்கி வைத்தார்.இதில் திருவண்ணாமலை, போளூர், செங்கம் ஆகிய கல்வி மாவட்டங்களில் இருந்து 6, 7, 8ம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தடகளம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் சுமார் 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நேற்று மாலை பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மாவட்ட விளையாட்டு அலுவலர் நான்சி தலைமையில், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துவேல் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். இதில் மாவட்ட கையுந்து பந்து பயிற்சியாளர் ஆ.முனுசாமி, உடற்கல்வி ஆசிரியர்கள் ரமேஷ், பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் முதல் 2 இடங்களை பெற்றவர்கள் அடுத்த மாதம் 2வது வாரத்தில் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறும் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வார்கள். மண்டல அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் 10 மாணவ, மாணவிகள் ஏப்ரல் மாதம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்படும் விளையாட்டு அகாடமிகளில் பயிற்சி பெற அனுமதிக்கப்படுவார்கள்.

Tags : Thiruvannamalai ,
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...