×

அடிப்படை வசதிகள் உள்ளதா? உதவிபெறும் பள்ளியில் கலெக்டர் ஆய்வு

வலங்கைமான், பிப்.28: வலங்கைமான் அடுத்த ஆதிச்சமங்கலம் ஊராட்சியில் உள்ள உதவிபெறும் தொடக்கபள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் ஆகியவற்றில் கலெக்டர் ஆனந்த் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.வலங்கைமான் தாலுகா ஆதிச்சமங்கலம் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முறையாக உள்ளதா என ஆய்வு செய்தார். தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளிடம் பள்ளி பாடங்களை வாசிக்க சொல்லி கேட்டறிந்தார். பின்னர் பள்ளி பாடங்களை தொடர்ந்து கற்க வேண்டும். உணவு உண்பதற்கு முன் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் என மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார். அதன் தொடர்ச்சியாக சமையலறையை பார்வையிட்டு மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக தயார் செய்யப்பட்டிருந்த மதிய உணவினை அருந்தி உணவின் தரத்தினை ஆய்வு செய்தார். பின்னர் அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டு குழந்தைகளிடம் ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்படுகின்றதா? என கேட்டறிந்து வருகை பதிவேடு, இருப்பு பதிவேடு ஆகியவைகளை ஆய்வு செய்தார். ஆய்வின்போது ஆர்டிஓ ஜெயபிரீத்தா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) அன்பரசு, தாசில்தார் தெய்வநாயகி, ஒன்றிய ஆணையர்கள் சிவக்குமார், தமிழ்செல்வி ஊராட்சித் தலைவர் துர்காதேவி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags : Collector ,Helping School ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...