×

கலெக்டரிடம் மனு திருவாரூர் மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

மன்னார்குடி, பிப்.28: கால்நடைகளை தாக்கும் முக்கிய நோய்களில் ஒன்று கால் மற்றும் வாய் நோய் என்கிற கோமாரி நோயாகும். இந்நோய் வைரஸ் கிருமிகளால் பரவுகிறது. மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் இக்கிருமியானது தண்ணீர் மூலமாகவும், காற்றின் மூலமாகவும் மிக விரைவில் பரவக்கூடியது.திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் உத்தரவின்படி இதுகுறித்து மாவட்ட கால்நடை பராமரிப்பு இணை இயக்குனர் டாக்டர் தனபாலன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கால்நடைகளில் (பசுவினம் மற்றும் எருமையினம்) ஏற்படும் கால் மற்றும் வாய் நோயை கட்டுப்படுத்த தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்திற்கு 2,01,460 கால்நடைகளுக்குரிய தடுப்பூசி மருந்தினை தமிழக அரசு வழங்கியுள்ளது. தடுப்பூசிப் பணிகள் பிப்ரவரி 28 ம் தேதி முதல் மார்ச் 19 ம் தேதி வரை மாவட்டம் முழுவதும் கிராம வாரியாக நடைபெறுகிறது என்றார்.திருவாரூர் கோட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் டாக்டர் விஜயகுமார் கூறுகையில், திருவாரூர் கோட்டத்தில் உள்ள வலங்கைமான், குடவாசல், கொரடாச்சேரி, நன்னிலம், திருவாரூர் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 75 ஆயிரம் பசு மற்றும் எருதுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணிகள் என்று முதல் துவங்க உள்ளன. இதற்கென திருவாரூர் கோட்டத்தில் மட்டும் 10 க்கும் மேற்பட்ட முகாம்கள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன என கூறினார்.

இதுகுறித்து மன்னார்குடி கோட்ட கால்நடை பராமரிப்பு உதவி இயக்குனர் டாக்டர் ஜான்சன் சார்லஸ் கூறுகையில், மன்னார்குடி கோட்டத்தில் உள்ள நீடாமங்கலம், மன் னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 1 லட்சத்து 7 ஆயிரம் பசு மற்றும் எருதுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணிகள் இன்று முதல் துவங்க உள்ளன. இதற்கென மன்னார்குடி கோட்டத்தில் மட்டும் 18க்கும் மேற்பட்ட முகாம்கள் ஏற்பாடு செய் யப் பட்டுள்ளன என கூறினார்.
கால்நடை வளர்ப்போர் இம்முகாமில் பயன்பெறுமாறும், நோயினால் ஏற்படும் பொருளாதார இழப்பினைத் தவிர்க்கவும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மேலும் முகாம்களில் பங்கேற்காமல் விடுபட்ட கால்நடைகளுக்கு மார்ச் 20 தேதி முதல் 30 ம் தேதி வரை தடுப்பூசி போடப்படும் என்றும் கால்நடைத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Manu Tribal Vaccination Camp ,Thiruvarur District ,
× RELATED தங்க நகை முதல் காய்கறி வரை எடை குறைவாக...