×

மன்னார்குடி அருகே வேலையின்மைக்கு எதிராக கையெழுத்து இயக்கம்

மன்னார்குடி, பிப்.28: மன்னார்குடி அருகே அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் வேலை யின்மைக்கு எதிரான கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.தமிழகம் முழுவதும் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 96 லட்சம் இளைஞர் கள் படித்து முடித்துவிட்டு வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருக்கின்றனர். இவர்களுக்கு வேலை வழங்கிட அரசு எந்தவிதமான முயற்சியும் மேற்கொள்ளவில்லை. மேலும் கல்வித்துறை, வருவாய்துறை, வேளாண்துறை, ஊரக வளர்ச்சி உள் ளிட்ட பல்வேறு துறைகளிலும் பல லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பபடாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது.இதனை கண்டித்தும், அரசின் அனைத்து துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும், புதிய பணியிடங்களை உரு வாக்கி அதில் படித்து முடித்த இளைஞர்களை நியமனம் செய்யக்கோரியும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கடந்த 26ம்தேதி முதல் அடுத்த மாதம் 6ம் தேதி வரை மாநிலம் தழுவிய அளவில் கையெழுத்து இயக்கம் நடத்தி அதனை தமிழக முதல்வரிடம் அளிக்கப்பட உள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் இந்த கையெழுத்து இயக்கத்தை 200 இடங்களில் நடத்திட முடிவு செய்யப்பட்டு மன்னார்குடி ஒன்றியத்தில் சவளக்காரன் ஊராட்சியில் இளைஞர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் பாப்பையன் தலை மையிலும், ஒன்றிய தலைவர் பழனிவேல் முன்னிலையிலும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.கையெழுத்து இயக்கத்தை மன்னார்குடி ஒன்றியக்குழு துணைத்தலைவர் வனிதா அருள்ராஜன் துவக்கி வைத்தார். இதில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் துரை அருள்ராஜன் பங்கேற்று கையெழுத்து இயக்கத்தின் நோக்கம் குறித்து பேசினார்.

Tags : Mannargudi ,
× RELATED பறக்கும்படை சோதனையில் ரூ.64,390 பறிமுதல்