×

மாமல்லபுரம் - கோவளம் சாலையில் முறிந்து விழும் அபாய நிலையில் பட்டுப்போன மரம்: சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள் அச்சம்

மாமல்லபுரம், பிப்.27: மாமல்லபுரம் - கோவளம் சாலையில் காய்ந்து பட்டுப்போய் சருகான மரம், முறிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அவ்வழியாக செல்லும்போது அச்சத்துடன் கடக்கின்றனர். அந்த மரத்தை உடனே அகற்ற வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.மாமல்லபுரத்தில் இருந்து கோவளம் செல்லும் சாலை முக்கிய சாலையாக விளங்குகிறது. சென்னையில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இந்த சாலை வழியாக மாமல்லபுரம் சென்று, அங்குள்ள புராதான சிற்பங்களை கண்டு ரசிக்கின்றனர். மேலும், சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரும் அனைத்து மாநகர பஸ்களும், இந்த சாலையை கடந்து பஸ் நிலையம் செல்ல வேண்டும்.மேலும், இந்த சாலையில் நெடுஞ்சாலை துறை சார்பில், சாலை ஓரங்களில் பல ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு மரங்களை நட்டு வைத்து, பராமரித்து வந்தனர். இதற்கிடையில், கடந்த 10 ஆண்டுகளாக முறையாக பராமரிக்காமல் விட்டதால், மரங்கள் காய்ந்து சருகாகி பட்டுப்போய் காணப்படுகின்றன.

இந்த மரங்கள், லேசான காற்று வீசினாலும் முறிந்து விழுந்து விழும் என்ற அச்சத்துடன் சுற்றுலா பயணிகளும், வாகன ஓட்டிகளும் அந்த மரத்தை கடந்து செல்கின்றனர். மேலும், மரங்கள் சாலையில் சாய்ந்தபடி உள்ளதால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் மீது உரசி செல்லும் நிலையில் உள்ளது. பெரிய அளவில் வாகனங்கள் செல்லும்போது அந்த மரத்தின் மீது உரசி செல்வதால் விபத்து ஏற்படும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது.எனவே, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், இதுபோன்று சாலையில் காய்ந்து சருகாகி ஆபத்தை விளைவிக்கும் நிலையில் உள்ள மரங்களை, உடனடியாக அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : road ,Mamallapuram - Kovalam ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...