புதிய விரிவுரையாளர்கள் நியமனத்திற்கு எதிர்ப்பு குழாய் உடைந்து குளம்போல் தேங்கி நின்ற குடிநீர் கவுர விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம்

திருச்சி, பிப்.26: திருச்சி அரிஸ்டோ ரவுண்டான பகுதியில் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் குடிநீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் அவ்வழியாக சென்ற வாகனஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.திருச்சி மாநகராட்சியில் உள்ள நான்கு கோட்டங்களில் மொத்தம் 65 வார்டுகள் உள்ளது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மாநகராட்சி அதிக கவனம் செலுத்தி வருகிறது. ேமலும் அடிப்படை வசதிகள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் நிர்வாகம் கூறுகிறது. ஆனால் திருச்சி மாநகராட்சியில் பொதுமக்கள் அடிப்படை பிரச்சனைகளான பாதாள சாக்கடை அடைப்பு, சாக்கடை கால்வாய்களை தூர்வாருதல், குடிநீர் குழாயில் உடைப்பு போன்றவர்களுக்கு சரியான முறையில் தீர்வு காண்பது இல்லை என்றும், புகார்தாரர் அலைக்கழிக்கப்பட்டு தொடர் புகாருக்கு பிறகு குறைகள் சிரமைக்கப்படுவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

Advertising
Advertising

இந்நிலையில் திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா சாலையில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் குளம் போல் தேங்கி நின்று வெளியேறி வருகிறது. இப்படி வெளியேறும் தண்ணீர் சாலைகளில் ஓடுவதால் அவ்வழியாக வரும் வாகனங்கள் கடந்து செல்லும்போது நடந்து செல்வோர் மற்றும் பைக்கில் செல்பவர்கள் மீது தண்ணீர் தெறிக்கிறது. மேலும் மாநகராட்சி நிர்வாகம் அடிக்கடி குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துங்கள், மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு தர உதவும் என்ன செய்திக்குறிப்புகள் மூலம் பொதுமக்களிடம் வேண்டுகோள் வைத்து வருகிறது. ஆனால் குடிநீர் குழாய் உடைப்பு விஷயத்தில் மாநகராட்சி நிர்வாகம் மெத்தன போக்கையே கடைபிடிக்கிறது. எனவே அரிஸ்டோ பகுதியில் குழாய் உடைந்து தண்ணீர் ஓடுவதை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகனஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: