தபால்துறை அலட்சியம் பணிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்து அரசு மகளிர் கல்லூரி முன் தற்காலிக பேராசிரியர்கள் தர்ணா, சாலை மறியல்

ஒரத்தநாடு, பிப். 27: பணிக்கு ஆபத்து வந்து விடுமோ என்று பயந்து ஒரத்தநாடு அரசு மகளிர் கல்லூரி முன் தற்காலிக பேராசிரியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். இவர்களுக்கு ஆதரவாக மாணவிகளும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அரசு மகளிர் கலைக்கல்லூரியில் தற்காலிக பேராசிரியராக 113 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று கல்லூரி முன் தற்காலிக பேராசிரியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பேராசிரியர்களுக்கு ஆதரவாக மாணவிகள் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதையடுத்து பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சை செல்லும் மெயின் ரோட்டில் பெரியார் சிலை அருகே தற்காலிக பேராசிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த தகவல் கிடைத்ததும் ஒரத்தநாடு டிஎஸ்பி செங்கமலகண்ணன் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியலை கைவிட்டு கல்லூரி முகப்பில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர்

இதுகுறித்து தற்காலிக பேராசிரியர்கள் கூறும்போது, தற்போது திடீரென சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து 3 பேராசிரியர்களை ஒரத்தநாடு அரசு மகளிர் கல்லூரிக்கு அரசு மாறுதல் செய்து உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே தற்காலிக பேராசிரியர்களாக இருக்கிற அந்த துறை 3 பேராசிரியர்களும் பணியில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். இன்று விடுவிக்கப்பட்ட 3 பேராசிரியர்களை போல மீதமுள்ள 113 பேராசிரியர்களும் விடுவிக்கப்படுவார்கள் என்று அச்சமடைகிறோம். அரசு எங்களது கோரிக்கையை பரிசீலித்து நிரந்தர பேராசிரியர்களாக அறிவிக்க வேண்டும் என்றனர். இதைதொடர்ந்து நேற்று இரவும் போராட்டத்தை தொடர்ந்தனர். இதுகுறித்து கல்லூரி முதல்வர் பானுமதி கூறும்போது, போராட்டம் செய்பவர்கள் அவர்களுடைய தேவைக்கு போராடுவார்கள்.கல்லூரியில் மாணவிகளுக்கு பாடம் நடத்தப்படவில்லை. நாங்கள் எந்தவித கருத்தும் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏதாவது கருத்து தேவைப்பட்டால் சென்னையில் இருக்கிற இயக்குனரை சந்தித்து கேட்டு கொள்ளுங்கள் என்றார்.

Related Stories: