பூண்டிமாதா பேராலயத்தில் சாம்பல் புதன் வழிபாடு

திருக்காட்டுப்பள்ளி, பிப். 27: பூண்டிமாதா பேராலயத்தில் சாம்பல் புதன் வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

திருக்காட்டுப்பள்ளி அடுத்த பூண்டிமாதா பேராலயம் கத்தோலிக்க கிறிஸ்தவ பேராலயங்களில் ஒன்றாகும். இங்கு நேற்று காலை சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது.கிறிஸ்துவின் பாடுகள், இறப்பு மற்றும் உயிர்ப்பு ஆகியவற்றை நினைவு கூறும் வகையில் தவக்கால துவக்கமாக நோன்பு, தவம், கடவுளின் இறக்கத்தை அனுபவிக்கும் வகையில் நேற்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. மனம் மாறுதலுக்கு இந்த நோன்பு ஒரு வாய்ப்பாக கருதப்படுகிறது. பழைய குருத்தோலைகளை எரித்து சாம்பல் தயாரிக்கப்பட்டது.நேற்று காலை 6 மணி மற்றும் 8.30 மணிக்கு பேராலய அதிபரும் பங்குத்தந்தையுமான பாக்கியசாமி தலைமையில் திருப்பலி பூஜை நடந்தது. இதில் கலந்து கொண்ட கிறிஸ்தவர்களுக்கு நெற்றியில் சாம்பல் பூசி ஆசி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பூண்டிமாதா பேராலய துணை அதிபர் அல்போன்ஸ், பூண்டிமாதா தியான மைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி தந்தைகள் ஆரோக்கிய ராஜேஷ், விக்டர் லாரன்ஸ், ஆன்மீக தந்தை அருளானந்தம் மற்றும் பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.கும்பகோணம்: கும்பகோணம் காமராஜர் சாலையில் உள்ள தூய அலங்காரன்னை பேராலயத்தில் சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்க்ள பங்கேற்று பாதிரியார்களிடம் சாம்பல் பூசி கொண்டனர். இதேபோல் கும்பகோணம், திருவிடைமருதூர் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சாம்பல் புதன் நிகழ்ச்சி நடந்தது.

Related Stories: