×

விராலிமலை அருகே கல்லூரி பேருந்துகள் மோதல்: 5 மாணவர் உட்பட 6 பேர் காயம்

விராலிமலை, பிப்.27: விராலிமலை அருகே தனியார் கல்லூரி பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிய விபத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் 5 பேர் உட்பட 6 பேர் காயம் அடைந்தனர். விராலிமலை அருகே திருச்சி சாலையில் உள்ள தனியார் கல்லூரி பேருந்து அன்னவாசலுக்கும். துவரங்குறிசிக்கும் ஒன்றன் பின் ஒன்றாக மதுரை சாலையில் சென்று கொண்டிருந்தது. முன்னாள் சென்ற துவரங்குறிச்சி பேருந்து விராலிமலைக்கு செல்ல திரும்பியபோது அன்னவாசல் செல்ல பின்னால் வந்த பேருந்து மோதியது.

இதில் பேருந்து ஓட்டுநர் லட்சுமணன், தொழில் நுட்பக் கல்லூரி மாணவர்கள் சுப்பிரமணி (19), யுவராஜ் (18), சதீஷ்குமார் (20), சிவசங்கரி (18), சீதா (19) ஆகியோர் காயம் அடைந்தனர். இந்த விபத்தில் பின்னால் வந்த காரும் கல்லூரி பேருந்தில் மோதியது. இதில் யாருக்கும் பாதிப்பில்லை. இந்த விபத்து குறித்து விராலிமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : College bus collision ,Viralaimalai ,
× RELATED விராலிமலை வட்டார கல்வி அலுவலகத்தில்...