×

தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்களுக்கு அறிவுரை உடனுக்குடன் கொள்முதல் செய்யாததால் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளுடன் காத்திருக்கும் விவசாயிகள்

அரியலூர், பிப். 27: சாக்குகள் பற்றாக்குறையால் திருமானூர் பகுதி நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் காத்திருக்கின்றனர். அரியலூர் மாவட்டத்தில் டெல்டா பகுதியான தா.பழூர், திருமானூர் பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்கு இல்லாமல் விவசாயிகள் காத்திருக்கின்றனர். திருவெங்கனூர் விவசாயிகள் 6 மாதம் கஷ்டப்பட்டு உற்பத்தி செய்து அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய வந்தால் சாக்கு இல்லையென கூறுவதால் வீட்டுக்கும் கொண்டு செல்ல முடியாமல் மீதம் அறுவடையாகும் நெல்லை எடுக்கவும் செல்ல முடியாமல் நெல்லை பாதுகாக்க தார்ப்பாய் வாடகை, நாள் கணக்கில் கூலியாட்களை காவலுக்கு வைத்து விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையங்களில் வேதனையோடு காத்திருக்கின்றனர்.இதுகுறித்து அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாய பிரிவு மாநில தலைவர் தங்க சண்முகசுந்தரம் கூறுகையில், நெல்லை விவசாயிகளை காத்திருக்க வைக்காமல் உடனடியாக சாக்கு பற்றாக்குறையை போக்கி கொள்முதல் முறைப்படுத்தப்பட வேண்டும். பண பட்டுவாடாவை உடனடியாக வழங்க வேண்டும். இனி வருங்காலங்களில் நெல்லை உத்தரப்பிரதேச மாநில அரசு போன்று நெல் கொள்முதல் முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும். மொத்தமாக விவசாயிகள் உற்பத்தி செய்து தரும் நெல்லை அப்படியே சாக்கு பயன்படுத்தாமல் லாரிகளில் ஏற்றும் நடைமுறையை கொண்டுவர வேண்டும். நேரம் விரயமாவதை தடுக்க இயலும்.

முன்னொரு காலத்தில் விவசாயிகள் தானிய கிடங்குகளில் சேமித்து வைப்பதுபோல நெல்லை பாதுகாத்து வைக்க கிடங்குகளில் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இதனால் உடனுக்குடன் லாரிகளில் இருந்து 10 நிமிடங்களில் நெல் இறக்க முடியும். லாரிகள் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. விவசாயிகளுக்கு ஹைட்ராலிக் முறையில் நெல் ஏற்ற இறக்க உதவும் வகையில் தொழில்நுட்ப உதவிகளை பயன்படுத்தி விவசாயிகளை காத்திருப்பதில் இருந்து தவிர்க்க உதவ வேண்டும் என்றார்.

Tags : Government Direct Purchasing Stations ,center supervisors ,
× RELATED விவசாயிகளை அடியோடு அழிக்க அரசுகள்...