×

சமூக ஊடகங்களில் வதந்தி பரப்புபவர்களை கைது செய்ய வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் பேச்சு

திருவண்ணாமலை, பிப்.27: சமூக ஊடகங்கள் வழியாக வதந்தி பரப்புபவர்களை கைது செய்ய வேண்டும் என பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் கூறினார்.திருவண்ணாமலையில் நேற்று நடந்த பாமக பிரமுகர் இல்ல திருமண விழாவில் பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் பேசியதாவது: தமிழ்நாட்டில் இனி வருங்காலங்களில் சாதிக்குள்ளாகவே மோதல்கள் உருவாகும். குடியுரிமை திருத்த சட்டம் குறித்து தவறான தகவல் பரப்புகின்றனர்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை நாம் ஒரு தாய் மக்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அமைதி பூங்காவாக தமிழ்நாடு இருக்கிறது. சாதி மதம் பேதம் இல்லாத சமுதாயம் உருவாக வேண்டும் என்று தான் நாம் அவரும் பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டை பொறுத்தவரை அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.சமூக ஊடகங்கள் வழியாக காட்டு தீ போன்று வதந்திகள் பரவுகிறது. அதில் எது உண்மை என்று தெரிந்து கொள்ளுங்கள். அதனை நம்பி ஏமாறக்கூடாது. சமூக ஊடகங்களில் வதந்திகளை பரப்புபவர்களை கைது செய்து தண்டிக்க வேண்டும். அதற்கு காவல் துறை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Arrest ,gossipers ,Ramadas ,founder ,Bamaka ,
× RELATED மதுரையில் கொரோனா வைரஸ் தொடர்பாக சமூக...