அரசு பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா

சங்ககிரி, பிப்.27: சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில், சங்ககிரி அரசு ஆண்கள், பெண்கள் பள்ளி, நட்டுவம்பாளையம் அரசு பள்ளி, சங்ககிரி மாதிரி பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.   தலைமை ஆசிரியர் ராஜன் வரவேற்றார். இதில் எம்எல்ஏ ராஜா கலந்து கொண்டு, 488 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். விழாவில், மாவட்ட கல்வி அலுவலர் ராமசாமி, ஒன்றிய செயலாளர் ரத்தினம், மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: