வரத்து அதிகரிப்பால் பாமாயில் பெட்டிக்கு ₹ 50 சரிவு

சேலம், பிப்.27: பாமாயில் வரத்து சற்று அதிகரித்துள்ளதால் பெட்டிக்கு ₹ 50 சரிந்துள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனர். பாமாயில் மரம் என்று அழைக்கப்படும் எண்ணெய் பனை என்பது பனை மர குடும்பத்தை சார்ந்தது. இவ்வகை மரம் இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. இந்த நாடுகளில் எடுக்கப்படும் பாமாயில் உலகம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்தியாவின் பாமாயிலின் தேவையை வெளிநாடுகள் தான் பூர்த்தி செய்கின்றன. கடந்த சில மாதமாக வெளி நாடுகளில் பாமாயில் உற்பத்தி குறைந்ததால் விலை அதிகரித்தது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு 10 லிட்டர் கொண்ட ஒரு பெட்டி பாமாயில் ₹ 850க்கு விற்றது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக பாமாயில் வரத்து சற்று அதிகரித்துள்ளது. இதன் காரணமாக லிட்டருக்கு ₹ 5 குறைந்துள்ளது. பெட்டிக்கு ₹50 சரிந்து ₹800 என விற்கப்படுகிறது.

Related Stories: