ஜாமர் கருவி பொருத்தியுள்ளதால் மத்திய சிறை பகுதியில் செல்போன் டவர் கிடைக்காமல் மக்கள் அவதி

சேலம், பிப்.27: சேலம் மத்திய சிறையில் ஜாமர்கருவி பொருத்தப்பட்டுள்ளதால் செல்போன் டவர் கிடைக்காமல் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.சேலம் மத்திய சிறை 1862ம்ஆண்டு கட்டப்பட்டதாகும். விடுதலை போராட்ட வீரர்களை தனிமைப்படுத்தும் வகையில், இங்கு 1432 தனித்தனி அறைகள் கட்டப்பட்டது. ஒருவரை ஒருவர் பார்க்க முடியாத வகையில், இந்த அறைகள் அமைக்கப்பட்டது. நாளடைவில் கருப்புகுல்லா சிறை என்ற பெரும் சேலம் மத்திய சிறைக்கு வந்தது. தொடந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் இச்சிறைக்கு கொண்டுவரப்பட்டதால் இப்பெயர் வந்ததாக கூறப்படுகிறது. 113 ஏக்கர் பரப்பளவில் பரந்துவிரிந்து கிடக்கும் இச்சிறையில் விதிகளின்படி 700 கைதிகளை வரை தான் வைக்க வேண்டும். ஆனால் 1200க்கும் மேற்பட்ட கைதிகள் வரை வைக்கிறார்கள்.

Advertising
Advertising

இந்நிலையில், சிறைகளில் கைதிகள் சொகுசுவாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். சிறையில் இருந்துகொண்டு செல்போனில் பேசி, கட்டப்பஞ்சாயத்து செய்வது, கொலைக்கான சதித்திட்டத்தை தீட்டுவது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து 9 மத்திய சிறைகளில் ₹5.40கோடி மதிப்பீட்டில் 12 செல்போன் ஜாமர்கருவி பொருத்தப்பட்டது.இந்நிலையில், சேலம் மத்திய சிறையில் பொருத்தப்பட்ட செல்போன் ஜாமர்கருவியினால் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மக்கள் செல்போனை பயன்படுத்தமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சிறையை சுற்றிலும் ஆயிரகணக்கான வீடுகள் இருக்கிறது.

 அப்பகுதி மக்களுக்கு எப்போதும் செல்போன் டவர் கிடைப்பது இல்லை. இதனால் அவர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அதே  போல நீதிமன்ற வளாகப்பகுதிளிலும் செல்போன் தொடர்பு கிடைக்காமல் வழக்கறிஞர்கள், பொதுமக்கள் பெரும் திண்டாட்டத்திற்கு ஆளாகியுள்ளனர். இது சிறையில் பொருத்தப்பட்ட செல்போன் ஜாமர்கருவியினால் தான் என அவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில், ‘சிறையை சுற்றிலும் குறைந்தது 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு குடியிருப்புகள் இருக்க கூடாது. ஆனால் சேலம் சிறையை சுற்றிலும் வீடுகள் அதிகரித்து விட்டது. தற்போது பொருத்தப்பட்டுள்ளது 3ஜி ஜாமர் கருவிதான். இதனால் சிறையில் யாரும் செல்போன் பயன்படுத்த முடியாது. அதனுடைய தாக்கம் வெளிப் பகுதியிலும் இருக்கிறது. அதற்கு நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது,’ என்றனர்.

Related Stories: