×

ஒன்றரை ஆண்டுக்கு முன்பு பணத்துக்காக நண்பரை கடத்தி கொன்றோம்

சேலம், பிப்.27:  ஜலகண்டாபுரம் ரியல் எஸ்டேட் அதிபர் பணம் தர மறுத்ததால், அவரை கொன்றதாக கைதான நண்பர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள நாச்சம்பட்டி செலவடையை சேர்ந்தவர் சக்திவேல் (38). ரியல் எஸ்டேட் அதிபரான இவர், கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் 18ம்தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றார். அதன்பின்னர் வீடு திரும்பாததால், அவரது மனைவி ரேவதி, ஜலகண்டாபுரம் போலீசில் புகார் செய்தார். இதனிடையே, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேசன் எல்லையில் அடையாளம் தெரியாத சடலமாக, ரியல் எஸ்டேட் அதிபர் சக்திவேல் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அவரது நண்பரான  ஈரோட்டை சேர்ந்த சீனி (எ) சீனிவாசன் (42) என்பவர்,  சக்திவேலை கடத்திச் சென்றதும், நண்பர்களுடன் சேர்ந்து தாக்கி கொலை செய்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து, சீனிவாசன் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர்களான புஷ்பராஜ் (38), திருப்பூர் வெங்கடேசன் (48), முருகபாண்டி (37) ஆகிய 4 பேரை நேற்று முன்தினம் கது செய்த போலீசார், சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். கைதான 4பேரும் பணம் பறிக்க கடத்திச்சென்றதாகவும் தராததால் கொன்றதாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘கொலை செய்யப்பட்ட சக்திவேல், ஈரோட்டை சேர்ந்த சீனிவாசன் மற்றும் புஷ்பராஜ் ஆகியோர் ஒன்றாக இணைந்து ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். தமிழகத்தின் பல பகுதிகளில் நிலங்களை வாங்கி, கூடுதல் விலைக்கு விற்பனை ெசய்து வந்துள்ளனர். இதில், சக்திவேலிடம் மற்ற இருவரை காட்டிலும் கூடுதலாக பணம் இருந்ததால், அதிகளவில் முதலீடு செய்து வந்துள்ளார். இதனை அறிந்த மற்ற இருவரும், சக்திவேலை கடத்தி பணம் பறிக்க முடிவு செய்தனர். அதன்படி நிலம் ஒன்றை பார்த்து வரலாம் எனக்கூறி சக்திவேலை மேட்டுப்பாளையத்திற்கு அழைத்து சென்றனர்.

அங்கு வைத்து பணம் கேட்டபோது, சக்திவேல் தன்னிடம் எதுவும் இல்லை எனக்கூறி மறுத்தார். இதில், ஆத்திரமடைந்த சீனிவாசன் மற்றும் அவரது நண்பர்கள் சக்திவேலை சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும் 3 பேருக்கு தொடர்பு உள்ளதால், அவர்களை தேடி வருகிறோம்,’’ என்றனர்.

Tags : half ,
× RELATED கொரோனா பாதிப்பால் பாக். ஸ்குவாஷ் நட்சத்திரம் ஆஸம் கான் மரணம்