×

தர்மபுரி அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி தொடக்க விழா

தர்மபுரி, பிப்.27: தர்மபுரி அரசு மருத்துவமனையில், தாய்ப்பால் வங்கி தொடக்க விழா நடந்தது. தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் நல துறையில், சிறப்பு பச்சிளங்குழந்தைகள் பராமரிப்பு மையத்தில், தாய்ப்பால் வங்கி தொடக்க விழா நடந்தது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் சீனிவாசராஜ் தலைமை வகித்தார். இந்த தாய்ப்பால் வங்கி, சென்னை இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் மற்றும் கூட்டாண்மை சமூக பொறுப்பின் மூலம் அரசு தர்மபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பச்சிளங்குழந்தைகள் நலப் பிரிவில் தொடங்கப்பட்டுள்ளது. இவ்விழாவிற்கு வருகை புரிந்தவர்களை குழந்தைகள் நல துறை தலைவர் டாக்டர் ரமேஷ்பாபு வரவேற்றார். இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், சென்னையின் பொது மேலாளர் சீதாராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

பச்சிளங்குழந்தைகள் சிறப்பு மருத்துவர் மொளுகன், தாய்ப்பாலை தானமாக கொடுப்பது பற்றியும், தாய்ப்பால் வங்கியின் நடைமுறை மற்றும் முக்கியத்துவம் குறித்தும், குழந்தை பிறந்தது முதல் 6 மாதத்திற்கு தாய்ப்பால் மட்டும் கொடுப்பதால் குழந்தைகளின் இறப்பு விகிதம், தொற்று நோய், வயிற்றுப் போக்கு தடுக்கப்படுவது குறித்தும், தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு பின் அதிக ரத்தப் போக்கு மற்றும் மார்பக புற்றுநோய் தடுக்கப்படுவது குறித்து எடுத்துரைத்தார்.

இவ்விழாவில், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் சேலம் பிரிவு மேலாளர் சிவக்குமார், சென்னை பிரிவின் கூட்டாண்மை சமூக பொறுப்பு மேலாளர்கள் கைலாஷ்காந்த், அபினவ், மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் சிவக்குமார், துணை முதல்வர் மருத்துவர் முருகன், குழந்தைகள் நல துறையின் இணை பேராசிரியர் பாலாஜி, மகப்பேறு பிரிவு துறை தலைவர் மலர்விழி மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், பிரசவித்த தாய்மார்கள் கலந்துகொண்டனர்.

Tags : Breastfeeding Bank Opening Ceremony ,Dharmapuri Government Hospital ,
× RELATED தருமபுரி மாவட்டம் சவுளுகொட்டாய்...