நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஏற்பாடுகள் தயார் பிளஸ்2 பொதுத்தேர்வு மார்ச் 2ல் துவக்கம்

நெல்லை, பிப். 27: பிளஸ்2 பொதுத்தேர்வு மார்ச் 2ம் தேதி துவங்குகிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 36 ஆயிரத்து 540 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதற்கான ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டுள்ளன.தமிழகத்தில் பிளஸ்2 பொதுத் தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை நடக்கிறது. பிளஸ்1 பொதுத் தேர்வு மார்ச் 4ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை நடக்கிறது. எஸ்எஸ்எல்சி தேர்வு மார்ச் 27ம் தேதி தொடங்கி ஏப்.13ம் தேதி வரை நடக்கிறது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பிளஸ்2 தேர்வை 16 ஆயிரத்து 113 மாணவர்கள், 20 ஆயிரத்து 427 மாணவிகள் என மொத்தம் 36 ஆயிரத்து 540 பேர் எழுதுகின்றனர். இதில் 160 பேர் மாற்றுத் திறனாளிகள். இதற்காக 133 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.பிளஸ்1 பொதுத்தேர்வை 16 ஆயிரத்து 780 மாணவர்களும், 20 ஆயிரத்து 413 மாணவிகளும் என மொத்தம் 37 ஆயிரத்து 193 பேர் எழுதுகின்றனர். இதில் 207 பேர் மாற்றுத் திறனாளிகள் இதற்காக 135 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வை 45 ஆயிரத்து 359 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.  பாளையங்கோட்ைட மத்திய சிறையில் 36 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக 173 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அரசு ெபாதுத்தேர்வுகள் தொடர்பாக நெல்லையில் கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் தேர்வு நடக்கும் நாட்களில் தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு நடத்தி தேர்வு நேர்மையான முறையில் நடக்கவும், குறைகளை களையவும் முதன்மைக் கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்வு மையங்களில் தேர்வு நேரங்களில் மின் தடையின்றி சீரான மின் விநியோகம் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், முதன்மைக் கல்வி அலுவலர் பூபதி, பிஆர்ஓ செந்தில் மற்றும் கல்வி மாவட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

10 தேர்வு அறைகளுக்கு ஒரு நிற்கும் படை

ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் 10 தேர்வு அறை

களுக்கு ஒரு நிலையான நிற்கும் படை நியமிக்க மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சேரன்மகாதேவி, தென்காசி, நெல்லை, சங்கரன்கோவில், வள்ளியூர் கல்வி மாவட்டங்களில் முறையே பறக்கும் படைகள் மூன்று பள்ளிகளுக்கு ஒரு குழு என்ற முறையில் ஒவ்வொரு குழுவிற்கும் மூன்று ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: