×

பிளாஸ்டிக் கவர் வைத்திருந்த கடைக்கு ₹10 ஆயிரம் அபராதம்

நாகர்கோவில், பிப். 27:  தமிழக அரசு பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்த தடைவிதித்துள்ளது. நாகர்கோவில் மாநகராட்சி அதிகாரிகள் நாகர்கோவில் பகுதிகளில் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்வதுடன், அபராதமும் விதித்து வருகின்றனர்.
 இருப்பினும் ஒரு சில கடைகளில் பிளாஸ்டிக் கவர்களை மறைத்து வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனர் சரவணகுமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் அதிகாரிகள் கே.பி.ரோட்டில் 7 கடைகளில் பிளாஸ்டிக் விற்பனை செய்யப்படுகிறதா என திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் அதிகளவில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அங்கிருந்த பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்து கடை உரிமையாளருக்கு ₹10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Tags :
× RELATED விஜய்வசந்த், பொன்.ராதாகிருஷ்ணன்,...