×

மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி

திருப்பூர், பிப். 27: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருப்பூர் பிரிவு நடத்தும் மாவட்ட அளவிலான ஆக்கி லீக் போட்டிகள் உடுமலை அரசு மேல்நிலைப்பள்ளி நேதாஜி மைதானத்தில் வருகிற 1ம் தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது. இந்த போட்டியில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆக்கி ஆண்கள் அணி மட்டும் கலந்து கொள்ளலாம். போட்டியில் முதலிடம் பெறும் அணிக்கு ரூ.1,600, 2ம் இடம் பெறும் அணிக்கு ரூ.800 பரிசு வழங்கப்படும். இத்த தகவலை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி கிருஷ்ணசக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

ரூ.22.78 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
அவிநாசி, பிப். 27:   அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் பருத்தி ஏல வர்த்தகம் நடந்து வருகிறது.
நேற்று நடந்த பருத்தி ஏலத்தில் ரூ.22லட்சத்து 78ஆயிரத்துக்கு வர்த்தகம் நடந்தது. இந்த வார ஏலத்தில், பருத்தி வரத்து 1000 மூட்டைகள் குறைந்திருந்தது.
மேலும், பருத்தி விலையும் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.300 வரை பருத்தி விலை அதிகரித்து இருந்தது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 1,572 பருத்தி மூட்டைகள் வந்திருந்தன.

இதில், டி.சி.எச். ரகப்பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6000 முதல் ரூ.6700 வரையிலும், ஆர்.சி.எச். பிடிரகப்பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4500 முதல் ரூ.5275 வரையிலும், கொட்டுரக (மட்டரக) பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1500 முதல் ரூ.2500 வரையிலும் ஏலம் போனது. இதில் மொத்தம் ரூ.22லட்சத்து 78ஆயிரத்துக்கு பருத்தி ஏலம் போனது.

Tags : Aki ,
× RELATED இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு...