×

பசுமை திறன் மேம்பாட்டு பயிற்சி நிறைவு

கூடலூர், பிப். 27:  சி.பி.ஆர் சுற்றுச்சூழல் கல்வி மையம் சார்பில் கூடலூரில் நடத்தப்பட்ட பெண்களுக்கான இரண்டு மாத பசுமை திறன் மேம்பாட்டு பயிற்சி நிறைவு பெற்றது.  கூடலூர் வருவாய் அலுவலர் சங்க கட்டிடத்தில் கைவினைப் பொருள் கண்காட்சி நடைபெற்றது. இதில் பெண்களுக்கு தேங்காய் சிரட்டையில் இருந்து கைவினை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்றது. பயிற்சியில் பங்கேற்ற பெண்கள் தயாரித்த தேங்காய் சிரட்டைகளால் ஆன கைவினைப்பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. மேலும் பயிற்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

 இந்த நிறைவு நிகழ்ச்சிக்கு சி.பி.ஆர் சுற்றுச்சூழல் கல்வி மைய கெளரவ இயக்குனர் நந்திதா கிருஷ்ணன் தலைமை வகித்து, கைத்தொழில்களை கற்றுக் கொள்வதன் மூலம் பெண்கள் தங்கள் வாழ்க்கை திறனையும், தகுதியையும் வளர்த்துக் கொள்ளும் வழிகள் குறித்தும், அரசு வழங்கும் மானிய கடன் திட்டங்கள் மூலம் தொழில் நடத்துவது குறித்தும் சிறப்புரையாற்றினார். நிர்வாக இயக்குனர் சுதாகர் வரவேற்புரை மற்றும் விளக்க உரையாற்றினார். தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் ராபர்ட், ஆர்.கே. அறக்கட்டளை இயக்குனர் லீலா கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கள இயக்குனர் குமாரவேல் நன்றி கூறினார்.

Tags :
× RELATED தடுப்பு சுவரில் வாகனம் மோதி தொழிலாளி பலி