×

தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சாம்பல் புதன் அனுசரிப்பு

ஊட்டி, பிப். 27: உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ மக்கள் ஈஸ்டர் என்னும் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுதல் பண்டிகை கொண்டாடுவதற்கு முன்பு 40 நாட்களை தவக்காலமாக கடைபிடிப்பார்கள். இதன் தொடக்க நாளான நேற்று சாம்பல் புதன் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அனுசரிக்கப்பட்டது. அனைத்து கத்தோலிக்க கிறிஸ்துவ ஆலையங்களிலும் சிறப்பு திருப்பலியும் நிறைவேற்றபட்டு குறுத்தோலைகளை எரித்து எடுக்கபட்ட சாம்பலை மந்திரித்து நற்செய்தி கூறி ஆலயத்திற்கு வந்த அனைத்து கிருஸ்துவ மக்களின் நெற்றியில் பூசிவிடுவர்.

இதன் தொடர்ச்சியாக ஊட்டி வண்டிசோலை பகுதியில் உள்ள தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில் மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற திருப்பலியில் அனைவருரின் நெற்றியில் சாம்பல் பூசப்பட்டது.  மேலும் நேற்று முதல் 40 நாட்கள் தவகாலம் துவங்கியுள்ளது. இத்திருபலியில் பங்குதந்தை ஜான் ஜோசப் தனிஸ், உதவி பங்குதந்தை பிராங்லின் உட்பட பலர் பங்கேற்றனர். தவ காலத்தை முன்னிட்டு தினமும் சிலுவை பாதை தியானித்தல், திருத்தல பயணங்கள் சென்று வருதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளது.

Tags : Ash Wednesday ,
× RELATED ஈஸ்டர் சண்டே விழாவில் பங்கேற்க...