கோவை இபிஎப் பென்சனர்கள் நலசங்க பொருளாளர் மணி நன்றி கூறினார்.கோவை மாநகராட்சியில் 14.85 லட்சம் வாக்காளர்கள்

கோவை, பிப். 27: கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை நேற்று வெளியிட்டார்.  அப்போது அவர் கூறுகையில், கோவை மாநகராட்சியில் ஆண் வாக்காளர்கள் 7,44,147 பேரும், பெண் வாக்காளர்கள் 7,40,813 பேரும், இதர வாக்காளர்கள் 203 என மொத்தம் 14 லட்சத்து 85 ஆயிரத்து 163 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த முறை 1,216 வாக்குச்சாவடிகள் இருந்தன.

தற்போது 29 வாக்குச்சாவடிகள் அதிகரித்து 1,245 வாக்குச்சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 1,400 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்கிற வீதம் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கும், அரசியல் கட்சியினர் பார்வைக்கும் வைக்கப்படும், இதில் மாற்றம் இருந்தால் தெரிவிக்கலாம்,’’ என்றார்.

Related Stories:

>