×

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர் நலச்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

கோவை, பிப்.27: கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து ஓய்வூதியர் நலச்சங்க கூட்டமைப்பினர் நேற்று  மாலை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு கோவை இபிஎப் பென்சனர்கள் நலசங்க தலைவர் புஷ்பராஜ் தலைமை தாங்கினார்.  ஆர்ப்பாட்டத்தின்போது குறைந்த மாத ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்கபட வேண்டும். பென்சன்தாரர்கள் இறுதி சடங்கு செலவுக்காக ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், என்.ஜி.ஆர் தொழிலாளர் நலசங்க தலைவர் மனோகரன்,  அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்க அமைப்பாளர் சுதர்சனம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Pensioners Welfare Coalition ,
× RELATED திரைப்பட தொழிலாளர்களின் பட்டினி சாவை தடுக்க உதவுங்கள்: பெப்சி கோரிக்கை