×

பண்ணாரி சோதனை சாவடியில் ஆய்வு

சத்தியமங்கலம், பிப்.27: பண்ணாரி சோதனைச்சாவடியில் மாநில போக்குவரத்து ஆணையர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி அம்மன் கோயில் பகுதியில்  தமிழக, கர்நாடக மாநில எல்லையில் வட்டார போக்குவரத்து துறை, காவல்துறை மற்றும் வனத்துறை சார்பில் 3 சோதனைச்சாவடிகள் உள்ளன. இந்த சோதனைச்சாவடிகளில்  24 மணி நேரமும் வாகனங்கள் சோதனை செய்யப்படுகிறது. இந்நிலையில், நேற்று சத்தியமங்கலம் வந்த மாநில போக்குவரத்து ஆணையர் தென்காசி ஜவகர் பண்ணாரி சோதனைச்சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களை கண்காணிப்பது குறித்து கேட்டறிந்ததோடு அனுமதிக்கப்பட்ட அளவை விட  அதிக உயரத்திற்கு பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களை கண்டறிய அமைக்கப்பட்டுள்ள உயரத்தடுப்புக்கம்பியை பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது கோவை இணை போக்குவரத்து ஆணையர் உமாசக்தி, ஈரோடு துணை போக்குவரத்து ஆணையர் நெல்லையப்பன், கோபி வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிவேல், சத்தியமங்கலம் மோட்டார் வாகன ஆய்வாளர் பாமாபிரியா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags : Inspection ,Pannari Checkpoint ,
× RELATED பொதட்டூர்பேட்டையில் ஆய்வு அரசு...