×

உள்ளாட்சி தேர்தல் வரைவு வாக்குச்சாவடி பட்டியல்

கள்ளக்குறிச்சி, பிப். 27: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஊரக மற்றும் நகர் பகுதிகளில் வாக்குச்சாவடிகள் அமைத்தல் தொடர்பாக உத்தேசிக்கப்பட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா வெளியிட்டார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா, சார் ஆட்சியர் காந்த், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ரத்தினமாலா, கோட்டாட்சியர் சாய்வர்தினி, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) வெங்கடாசலம் ஆகியோர் உடன் இருந்தனர். இது தொடர்பாக ஆட்சியர் கிரண்குராலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகம், விழுப்புரம் மாவட்ட ஊராட்சி அலுவலகம், சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், சிற்றூராட்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகம் ஆகியவற்றில் இவ்வரைவு வாக்குச்சாவடி பட்டியல் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே இவ்வரைவு வாக்குச்சாவடி பட்டியலில் கண்டுள்ள வாக்குச்சாவடிகளின் விவரங்கள் தொடர்பாக ஏதேனும் கருத்துக்களை தெரிவிக்க வேண்டுமெனில் வருகிற 2 ம்தேதி மாலை 5 மணி அளவில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோருக்கு நடத்தப்படும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். இறுதி வாக்குச்சாவடி பட்டியல் வருகிற 5ம்தேதி வெளியிடப்படும்.

Tags :
× RELATED வாகன ஓட்டிகள் அவதி திருச்சி...