×

விழுப்புரம் மாவட்டத்தில் 5ம் தேதி இறுதிவாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு

விழுப்புரம், பிப். 27: உள்ளாட்சி தேர்தலையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் வரும் 5ம் தேதி இறுதி வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலையொட்டி ஊரக மற்றும் நகர் பகுதிகளில் வாக்குச்சாவடிகள் அமைத்தல் தொடர்பாக உத்தேசிக்கப்பட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் கடந்த 25ம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி பிரிவு, மாவட்ட ஊராட்சி அலுவலகம், சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம், சிற்றூராட்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களில் இந்த வரைவு வாக்குச்சாவடி பட்டியல்களில் கண்டுள்ள வாக்குச்சாவடிகளின் விவரங்கள் தொடர்பாக ஏதேனும் கருத்துக்கள் தெரிவிக்க வேண்டுமெனில் வரும் 2ம் தேதி மாலை 3 மணியளவில் மாவட்ட ஆட்சியல் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் பொதுமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், எம்பிக்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டு தங்கள்கருத்துக்களை தெரிவிக்கலாம். இறுதி வாக்குச்சாவடி பட்டியல் 5ம் தேதி வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Villupuram District ,
× RELATED விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கு...