×

நடவடிக்கை எடுக்க கோரிக்கை நெப்பத்தூர் நிலையத்தில் 10 ஆயிரம் மூட்டைகள் தேக்கத்தால் நெல் கொள்முதல் நிறுத்தம்

சீர்காழி, பிப். 26: நெப்பத்தூர் கொள்முதல் நிலையத்தில் 10 ஆயிரம் நெல்மூட்டைகள் தேக்கத்தால் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் விசாயிகள் அவதிப்படுகிறார்கள். சீர்காழி அருகே நெப்பத்தூர் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் நெல் மூட்டைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பல நாட்களாக எடுத்து செல்லாததால், சாலை ஓரங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன. இதனால் கடந்த இரண்டு நாட்களாக நெல் கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் தங்கள் மூட்டைகளை கொள்முதல் நிலையத்திற்கு எடுத்து சென்று விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். சில விவசாயிகள் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளுடன் பல நாட்களாக தங்கியிருக்கும் அவல நிலையும் இருந்து வருகிறது.

சாலைகளில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளதால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலன் கருதி நெல்கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். விவசாயிகள் வைத்துள்ள நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிகாரிகள் மீது போலீசில் புகார் இது குறித்து சுமத்திராவின் கணவர் ராஜா, கீழ்வேளூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில், கீழவேளூர் கச்சனம் சாலையில் இலுப்பூர் சத்திரம் அருகே சாலை ஓரத்தில் வல்ல விநாயககோட்ட கூட்டு குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் ஏற்பட்ட மண் குவியலில் எனது மனைவி சுமத்திரா இரண்டு சக்கர வாகனத்தில் வந்த போது விபத்திற்குள்ளாகி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளார். எந்த அறிவிப்பும் இல்லாமல் பள்ளம் தோண்டடியதோடு, பள்ளம் தோண்டியுள்ளதற்கான முன் எச்சரிக்கை அறிவிப்பு பலகையும் வைக்காமல் உள்ளனர். சுமத்திரா விபத்திற்கு காரணமான குடிநீர் திட்ட உதவி பொறியாளர் மற்றும் உதவி நிர்வாக பொறியாளர், ஒப்பந்தகாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : station ,Nepathur ,
× RELATED மேட்டூர் அனல் மின் நிலையத்தில்...